நாடளாவிய ரீதியில் 72 சுகாதார தொழிற்சங்கங்கள் இன்று (13.2.2024) காலை 06.30 மணி முதல் வேலை நிறுத்தத்தில் ஈடுபட தீர்மானித்துள்ளன.
அந்தவகையில், சுகாதார பணியாளர்களின் பணிப்புறக்கணிப்பு போராட்டம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையிலும் இடம்பெறுகின்றது.
வைத்தியர்களுக்கு வழங்கப்படும் DAT கொடுப்பனவுக்கு இணையான கொடுப்பனவை தங்களுக்கும் வழங்குமாறு கோரி இந்த வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளதாக சுகாதார தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பின் ஏற்பாட்டாளர் ரவி குமுதேஷ் தெரிவித்துள்ளார்.