கனடாவில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், அண்ணன் தம்பி உட்பட மூன்று பேர் பலியான நிலையில், அந்த விபத்து தொடர்பான பல கவலையளிக்கும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
கனடாவின் ஒன்ராறியோ மாகாணத்திலுள்ள பிராம்ப்டன் நகரில் நிகழ்ந்த கோர விபத்தொன்றில், இந்தியர்கள் மூவர் பலியாகியுள்ளனர்.
வியாழக்கிழமை அதிகாலை பிராம்ப்டனில் இரண்டு வாகனங்கள் விபத்துக்குள்ளாகியுள்ளன.
அவற்றில் ஒன்றில், ரீத்திக் (Reetik Chhabra, 23), அவரது தம்பியான ரோஹன் (Rohan Chhabra, 22) மற்றும் அவர்களுடைய நண்பரான கௌரவ் (Gaurav Fasge, 24) ஆகியோர் பயணித்துள்ளனர்.
அவர்கள் பயணித்த கார், மின் கம்பம் ஒன்றில் மோதியுள்ளது. மோதிய வேகத்தில் கார் அப்பளமாக நொறுங்க, காருக்குள் இருந்த மூவரும் சம்பவ இடத்திலேயே பலியாகியுள்ளனர்.