சிறிய பட்ஜெட் திரைப்படங்களுக்கு டிக்கெட் விலையை குறைக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்திற்கு தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சிறு பட்ஜெட் படங்களுக்கு 80 – 100 ரூபாய் எனவும், மீடியம் மற்றும் பெரிய பட்ஜெட் படங்களுக்கு 120 – 150 ரூபாய் எனவும் கட்டணத்தை மாற்ற வேண்டும்.
சென்னை, மதுரையில் ரூ.100 மட்டுமே வசூலிக்க வேண்டும் . திருச்சி, கோவை, சேலம் தவிர்த்த மற்ற நகரங்களில் அதிகபட்சம் ரூ.80 கட்டணம் நிர்ணயிக்கலாம்.
வரும் 23-ம் தேதி முதல் வெளியாகும் படங்களுக்கு டிக்கெட் விலையை குறைவாக நிர்ணயிக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சிறு பட்ஜெட் படங்களை திரையரங்கிற்கு வந்து மக்கள் பார்ப்பதை இலகுவாக்கும் வகையில் கோரிக்கை விடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.