இலங்கையில் இடம்பெற்ற போரின் இறுதி மாதங்களில் யுத்த சூனிய பகுதிக்குள் இலங்கை இராணுவம் நடத்திய எறிகணைத் தாக்குதலில் கொல்லப்பட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒருவர் யாழ்ப்பாணத்தில் நினைவு கூறப்பட்டுள்ளார்.
போர்க்காலச் சூழ்நிலைகளை வெளிப்படுத்திய ஊடகவியலாளர்களில் ஒருவராக அறியப்படும் புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் 15ஆம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஏற்பாட்டில் கட்சியின் யாழ். அலுவகலத்தில் இடம்பெற்றுள்ளது.
அதன் போது புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தியின் உருவப்படத்திற்கு மலர்மாலை அணிவித்து, விளக்கேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.