தாய்லாந்து விமான சேவை நிறுவனத்திற்கு சொந்தமான விமானத்தின் கதவை கனேடியர் ஒருவர் திறந்த சம்பவம் பயணிகள் மத்தியில் பதற்றத்தை ஏற்படுத்தியதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
சியாங் மாய் விமான நிலையத்திலிருந்து புறப்படுதவதற்கு ஆயத்தமாகி பயணத்தை ஆரம்பிக்கும் நிலையில், குறித்த கனேடியர் கதவை திறந்துள்ளார்.
கனேடிய சுற்றுலாப் பயணி ஒருவரே இவ்வாறு விமானத்தின் அவசர வெளியேற்றக் கதவினை திறந்துள்ளார்.
குறித்த பயணியை பிடித்த விமானப் பணியாளர்கள், விமான நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளனர்.
விமானத்தின் கதவு திறக்கப்பட்டதனால் விமானப் பயணத்தை தொடர முடியவில்லை என அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
திடீரென கதவு திறக்கப்பட்டதனால் பயணிகள் பதற்றமடைந்துள்ளனர்.
இந்த சம்பவம் காரணமாக ஏனைய விமானங்களின் பயணங்களுக்கும் பாதிப்பு ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
தம்மை மக்கள் பின்தொடர்ந்த காரணத்தினால் கதவினை திறந்ததாக குறித்த கனேடிய பிரஜை பொலிஸ் விசாரணைகளின் போது தெரிவித்துள்ளார்.