பாகிஸ்தானின் அடுத்த பிரதமராக ஷெபாஸ் ஷெரீப்பை நியமிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
இவர் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சகோதரர் ஆவார்.
நவாஸ் ஷெரீப் மற்றும் பிலாவல் பூட்டோவின் கட்சிகள் ஆட்சி அமைக்க உடன்பாடு எட்டப்பட்டுள்ளதாக வெளிநாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரத் தேர்தலுக்குப் பிறகு பிரதமரைத் தேர்ந்தெடுப்பதற்கு நவாப் ஷெரீப்பின் கட்சிக்கு தேவையான ஆதரவை வழங்குவதாகக் பூட்டோவின் கட்சி கூறியிருந்தது.
தேர்தலில் நவாப் ஷெரீப்பின் கட்சி 75 இடங்களிலும், பூட்டோவின் கட்சி 54 இடங்களிலும் வெற்றி பெற்றன.
எனினும் தேர்தலில் தங்களுக்கு எதிராக மோசடி நடந்துள்ளதால், தேர்தல் முடிவுகளை சவாலுக்கு உட்படுத்தவுள்ளதாக இம்ரான் கானும் அவரது கட்சி உறுப்பினர்களும் தெரிவித்துள்ளனர்.