இஸ்ரேல் இராணுவம், ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவரை கைது செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.
ஹமாஸ் இராணுவத்தின் முக்கியத் தலைவர் உமர் அல்-பயேத் என்பவரைக் கைது செய்திருப்பதாக இஸ்ரேல் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளது.
மேற்குக் கடற்கரைப் பகுதியில் பொலிஸ் மற்றும் இஸ்ரேலின் பாதுகாப்புப்படை இந்த கைது நடவடிக்கையை மேற்கொண்டதாகத் தெரிவித்துள்ளது.
இந்த நடவடிக்கையின்போது அடையாளம் தெரியாதநபர் நடத்திய தாக்குதலில் 2 இஸ்ரேல் வீரர்கள் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.