ஈரானின் வெளிவிவகார அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹெய்ன் இலங்கைக்கு விஜயமொன்றினை மேற்கொள்ளவுள்ளார்.
இஸ்ரேலிய போக்குவரத்து அமைச்சர் மிரி ரெகெவ் கொழும்புக்கு விஜயம் செய்த சில நாட்களிலே ஆகியுள்ள நிலையிலேயே அவர் நாளைய தினம் (19.02.2024) வருகை தரவுள்ளார்.
குறித்த இரண்டு நாள் விஜயத்தை முன்னிட்டு ஈரானிய கடற்படையின் இரண்டு கப்பல்கள் முறையான அழைப்பின் பேரில் நேற்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளன.
கொழும்பில் உள்ள வெளிவிவகார அமைச்சு இது ஒரு “நல்லெண்ண” விஜயம் என குறிப்பிட்டுள்ளது.
கடந்தாண்டு ஆகஸ்ட் மாதம் தெஹரானுக்கு விஜயம் செய்திருந்த இலங்கை வெளியுறவு அமைச்சரின் அழைப்பின் பேரில் அமீர் அப்துல்லாஹெய்ன் இலங்கை வருகை தரவுள்ளார்.