Home இலங்கை இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்து10,000 வீடுகள்

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்து10,000 வீடுகள்

by Jey

இந்திய அரசின் நிதி உதவியின் கீழ் மலையகத்துக்கான 10,000 வீடுகளைக் கொண்ட பாரத் – லங்கா வீட்டுத்திட்டம் அங்குரார்ப்பணம் செய்யப்பட்டது.

ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுடன் இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜாவும் இணைந்துக் கொண்டிருந்ததாக ஜனாதிபதி ஊடகபிரிவு தெரிவித்துள்ளது.

இதன் முதற்கட்டமாக 10 மாவட்டங்களில் 1,300 வீடுகளின் நிர்மாணப் பணிகளுக்கான அங்குரார்ப்பணம் இடம்பெற்றது.

இதன் பணிகளை எதிர்வரும் ஆகஸ்ட் மாதத்துக்குள் நிறைவு செய்வதற்கு எதிர்பார்க்கப்பட்டுள்ளதாக நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

related posts