‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தில் சிறப்பான நடிப்பிற்காக பாராட்டுகளைப் பெற்றவர் சஞ்சனா நடராஜன். இப்போது அவர் ‘போர்’ திரைப்படத்தை ஆவலுடன் எதிர்பார்த்துள்ளார்.
இந்த படத்தில் தனது கதாபாத்திரத்தைப் பற்றி சஞ்சனா பேசுகையில், “ரிஷிகா’ என்ற மருத்துவ மாணவியாக நடித்துள்ளேன்.
இந்த கதாபாத்திரம் எனது நிஜ வாழ்க்கை இயல்பை ஒத்திருக்கிறது.
நண்பர்கள் குழுவைச் சுற்றி சுழலும் இந்தக் கதை அவர்களின் கடந்த கால சம்பவங்கள் எப்படி தற்போதைய வாழ்க்கையை பாதிக்கிறது என்பதைக் கூறும்.
இந்த படம் அரசியல் விஷயங்களைப் பேசுவதோடு, சில சமூகப் பிரச்சினைகளையும் சொல்லி இருக்கிறது.
இந்த படத்தில் எனது கதாபாத்திரம் எனக்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தக் கதை நிஜ சம்பவங்களின் அடிப்படையில் உருவானது” என்றார்.