அமெரிக்காவின் மிக்சிகன் மாகாணத்திலுள்ள ‘ தி மேசன் ஜார் கஃபே’ எனும் உணவகத்துக்கு சில நாட்களுக்கு முன்பு மார்க் என்பவர், காலை உணவு சாப்பிட வந்துள்ளார். அவர் சாப்பிட்டதற்கான தொகை 32 டொலர் பில்லுக்கு டிப்ஸ் பிரிவில் 10 ஆயிரம் டொலரை டிப்ஸாக கொடுத்துள்ளார்.
பொதுவாக அந்த உணவகத்துக்கு வரும் வாடிக்கையாளர்கள் பில் தொகையில் 15% – 25% வரையிலேயே டிப்ஸ் வழங்குவது வழக்கம். ஆனால், மார்க் 30,835% டிப்ஸாக வழங்கியுள்ளார்.
இதுகுறித்து மேலாளர், அவ்வாடிக்கையாளரிடம் சென்று, “டிப்ஸ் தொகையில் 10 ஆயிரம் டொலர் என்று குறிப்பிட்டுள்ளீர்கள். தவறுதலாக எழுதிவிட்டீர்களா?” என்று கேட்டுள்ளார். அதற்கு அவர், “இல்லை. அந்தத் தொகையைத்தான் நான் டிப்ஸாக வழங்க விரும்புகிறேன்” என்றார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, “என்னுடைய நண்பர் இறந்துவிட்டார். அவரது இறுதிச் சடங்குக்காகவே நான் இந்த ஊருக்கு வந்துள்ளேன். நண்பரின் நினைவாக இந்த டிப்ஸை வழங்க விரும்பினேன்” என்றார்.