Home இலங்கை யாழ் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் எதிர்ப்பு போராட்டம்

யாழ் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றில் எதிர்ப்பு போராட்டம்

by Jey

யாழ் பிரபல ஆண்கள் பாடசாலை ஒன்றிற்கு முதன்முறையாக பெண் அதிபர் ஒருவரை நியமித்தமைக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

208 ஆண்டுகளைக் கடந்த ஆண்கள் பாடசாலையான யாழ்ப்பாணம் மத்திய கல்லூரிக்கே புதிதாக பெண் அதிபர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார்.

இந்த நியமனத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்தே இன்று காலை போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

அந்த போராட்டத்தின் பேது முதல் முறையாக பெண் அதிபரை நியமிப்பதற்கு ஆட்சேபனை செய்கின்றோம் என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் விசனம் தெரிவித்திருந்தனர்.

அதேவேளை, கல்லூரியின் முன்னாள் அதிபராக செயற்பட்ட எஸ்.இந்திரகுமாரை மீண்டும் நியமிக்குமாறும் வலியுறுத்தப்பட்டது.

இந்தநிலையில், குறித்த பிரச்சினைக்கு விரைவில் தீர்வு பெற்றுத்தருவதாக கடற்றொழில் அமைச்சரும் ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளருமான டக்ளஸ் தேவானந்தா உறுதி அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

 

related posts