Home உலகம் இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினை சட்டவிரோதம் என அறிவிக்குமாறு கோரிக்கை

இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினை சட்டவிரோதம் என அறிவிக்குமாறு கோரிக்கை

by Jey

காஸா பகுதியில் இஸ்ரேலினால் மேற்கொள்ளப்பட்டுவரும் சட்டவிரோத ஆக்கிரமிப்பு குறித்து சர்வதேச நீதிமன்றத்தில் (The International Court of Justice) அமெரிக்கா மற்றும் ரஷ்யா ஆகியன நாடுகள் சூடான வாத பிரதிவாதத்தில் ஈடுபட்டிருந்தன.

எதிர்வரும் 26 ஆம் திகதி இடம்பெறவுள்ள விவாதத்தில் அமெரிக்கா, சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, எகிப்து, பிரான்ஸ் உள்ளிட்ட 50 இற்க்கும் மேற்பட்ட நாடுகள் தமது வாதங்களை முன்வைக்கவுள்ளன.

பாலஸ்தீனப் பிரதேசங்களில் இஸ்ரேலில் தொடர் இனப் பாகுபாடு மற்றும் இன ஒதுக்கல் என்பன பாலஸ்தீனத் தன்னாட்சி அதிகாரத்தை தூண்டிவிடும் செயற்பாடகாவே காணப்படுவதாக பாலஸ்தீன வெளியுறவு அமைச்சர் குற்றங்சாட்டியிருந்த நிலையில், சர்வதேச நீதிமன்றம் விசாரணையை ஆரம்பித்திருப்பது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வென சர்வதேச சமூகம் தெரிவிக்கின்றது.

15 நீதிபதிகள் கொண்ட குழு குறித்த விசாரணைகளை முன்னெடுக்கவுள்ளனர். இதேவேளை இஸ்ரேலின் ஆக்கிரமிப்பினை சட்டவிரோதம் என அறிவிக்குமாறு பலஸ்தீன பிரதிநிதி மன்றில் கோரிக்கை விடுத்திருந்தார்.

தற்போதைய விசாரணைகள் காஸாவில் இஸ்ரேல் மீதான அரசியல் அழுத்தத்தை அதிகரிக்கக்கூடும். குறித்த போரில் இதுவரை 29,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

related posts