பைசர் (Pzifer), மொடர்னா (moderna), அஸ்ட்ரா செனெகா ( AstraZeneca) போன்ற கொரோனா தடுப்பூசிகளின் பக்க விளைவுகள் தொடர்பில் பல்வேறு நாடுகளில் ஆய்வுகள் நடத்தப்பட்டுள்ளன.
இதன்போது, உலகளாவிய தடுப்பூசி தரவு வலையமைப்பு (Global Vaccine Data Network)எனப்படும் அமைப்பின் ஆய்வு மூலம் இந்த தடுப்பூசிகளுடன் தொடர்புடைய 13 வெவ்வேறு மருத்துவ நிலைமைகள் கண்டறியப்பட்டுள்ளன.
மேலும், ஆர்ஜென்டினா, ஆஸ்திரேலியா, கனடா, டென்மார்க், பின்லாந்து, பிரான்ஸ், நியூசிலாந்து மற்றும் ஸ்காட்லாந்து ஆகிய எட்டு நாடுகளில் கிட்டத்தட்ட 100 மில்லியன் தடுப்பூசி போடப்பட்டவர்களை மையப்படுத்தி குறித்த ஆய்வு நடத்தப்பட்டுள்ளது.
இதன்படி தடுப்பூசியைத் தொடர்ந்து நரம்பியல், இரத்தம் மற்றும் இதயம் தொடர்பான பிரச்சினைகள் சிறிது அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர்கள் அவதானித்துள்ளனர்.
குறிப்பாக, எம்.ஆர்.என்.ஏ தடுப்பூசிகளைப் பெற்றவர்களுக்கு இதய தசையின் அழற்சியான மயோர்கோர்டிஸ் ஏற்படும் அபாயம் அதிகமாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.