இங்கிலாந்து மன்னர் சார்லஸ் மற்றும் பிரித்தானிய பிரதமர் ரிஷி சுனக் நேரில் சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
மன்னர் சார்லஸ்க்கு புற்றுநோய் இருப்பது உறுதிப்படுத்தப்பட்ட பிறகு, முதல்முறையாக மன்னர் சார்லஸ் மற்றும் ரிஷி சுனக் சந்திப்பு நடைபெற்றுள்ளது.
பக்கிங்காம் அரண்மனையில் நடைபெற்ற இந்த சந்திப்பில் “பல்வேறு அற்புதமான தகவல்கள் மற்றும் வாழ்த்து அட்டைகள் எனக்கு வந்துள்ளன.
இவை என் துயரத்தை பெரும்பாலான சமயங்களில் குறைத்துள்ளன என மன்னர், பிரதமரிடம் தெரிவித்ததாக கூறப்படுகின்றது.
நாங்கள் அனைவரும் உங்களுக்கு பின்புலமாக இருக்கிறோம். இந்த தேசம் உங்களுக்கு ஆதரவாக நிற்கிறது, என மன்னரிடம் , பிரதமர் ரிஷி சுனக் ஆறுதல் கூறியதாகவும் கூறப்படுகின்றது..