Home இந்தியா புதுடில்லியில் போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

புதுடில்லியில் போராட்டத்தில் ஒருவர் உயிரிழப்பு

by Jey

இந்திய தலைநகர் புதுடில்லியில் விவசாயிகளினால் முன்னெடுத்துவரும் போராட்டத்தில் ஒருவர் உயிரிழந்திருப்பதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

வேளாண் விளை பொருட்களின் குறைந்தபட்ச ஆதார விலைக்கு சட்டப்பூர்வ உத்தரவாதம், கடன் தள்ளுபடி, உள்ளிட்ட 13 கோரிக்கைகளை வலியுறுத்தி விவசாயிகள் புதுடெல்லி நோக்கி பேரணி செல்லும் போராட்டத்தை கடந்த 13 ஆம் திகதி ஆரம்பித்திருந்தனர்.

இந்நிலையில் விசாயிகளுக்கும் மற்றும் ஹரியானா மாநில பொலிஸாருக்கும் இடையே பஞ்சாப், அரியானா எல்லைப் பகுதிகளில் கடும் மோதல் நீடித்துவந்தது. விவசாயிகள் மீது கண்ணீர் புகை குண்டுகள் வீசப்பட்டன.

அரசாங்கத்துடனான மூன்றாம் கட்ட பேச்சு வார்த்தை தோல்வியில் முடிந்த நிலையில், பாரிய கனரக இயந்திரங்களை கொண்டு விவசாயிகள் போராட்டங்களில் ஈடுபட்டதுடன், இன்றும் போராட்டத்தில் ஈடுப்பட ஆயத்தமாகினர்.

இதனையடுத்து, பொலிஸாருக்கும், விவசாயிகளுக்கும் இடையில் மோதல் ஏற்பட்டது. அதில் மூன்று விவசாயிகள் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டநிலையில் சிகிச்சை பலனின்றி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தநபர் பஞ்சாப் மாநிலத்தின் பதிண்டா மாவட்டத்தை சேர்ந்த 21 வயதான சுப்கரன் சிங் என பொலிஸார் தெரிவித்துள்னனர்.

அனர்த்தம் காரணமாக விவசாயிகளின் போராட்டம் இரண்டு நாட்களுக்கு ஒத்திவைக்கப்படுவதாக விவசாய சங்க தலைவர்கள் அறிவித்துள்ளனர்.

புதுடில்லியில் ஏற்பட்ட பதற்றத்தையடுத்து 5 ஆம் கட்ட பேச்சுவார்த்தைக்கு விவசாய சங்கங்களுக்கு மத்திய வேளாண் அமைச்சர் மந்திரி அர்ஜுன் முண்டா அழைப்பு விடுத்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

 

 

related posts