ஜனாதிபதி தேர்தலை உரிய நேரத்தில் நடத்தவில்லை என்றால், எதிர்வரும் ஒக்டோபர் மாதம்18 ஆம் திகதிக்கு பின்னர், அரசாங்கத்திற்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஊடாக பாராளுமன்றத்திற்கு தெரிவாகி தற்போது எதிர்க்கட்சியில் அங்கம் வகிக்கும் உறுப்பினர் ஒருவர் கூறியுள்ளார்.
இது போராட்டமா,சட்ட நடவடிக்கையா அல்லது வேறு விதமான செயற்பாடா என்பதை தற்போது கூற முடியாது.
இந்த பாரிய எதிர்ப்பு நடவடிக்கைக்காக எதிரணியில் உள்ள சகல தரப்பினரையும் இணைத்துக்கொள்ள எதிர்பார்த்துள்ளோம். எதிரணியில் உள்ள சில கட்சிகள் இதற்கு ஏற்கனவே இணக்கம் தெரிவித்துள்ளன.
ஜனாதிபதி தேர்தலை இந்த வருடத்தில் உரிய காலத்திற்குள் நடத்தவில்லை என்றால், எதிர்வரும் நவம்பர் மாதம் 18 ஆம் திகதிக்கு பின்னர் ஆட்சியில் இருக்கும் அரசாங்கம், சட்டப்படியான அரசாங்கமாக இருக்காது. அது சட்டவிரோத அரசாங்கமாகவே இருக்கும் என கூறியுள்ளார்.