கனடாவில் சஸ்காடூன் பகுதியில் பெண் ஒருவர் பாரியளவில் மோசடிகளில் ஈடுபட்டதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அல்பேர்ட்டா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவரே இவ்வாறு குற்றம் சுமத்தப்பட்டுள்ளார்.
கடந்த 2023ம் ஆண்டு செப்டம்பர் மற்றும் ஒக்ரோபர் மாதங்களில் இந்த மோசடிகள் இடம்பெற்றுள்ளன.
வயது முதிர்ந்தவர்களிடம் இவ்வாறு அதிகளவில் மோசடிகள் செய்யப்பட்டுள்ளன.
இந்தப் பெண் மொத்தமாக 97000 டொலர்களை மோசடி செய்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது.