Home இந்தியா இன்று கைவிடப்பட்ட இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்

இன்று கைவிடப்பட்ட இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம்

by Jey

இந்திய, இராமேஸ்வர மீனவர்களின் வேலை நிறுத்த போராட்டம் இன்று கைவிடப்பட்ட நிலையில் மீனவர்கள் மீண்டும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர்.

எல்லை தாண்டி மீன்பிடியில் ஈடுப்படட தமிழக மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தநிலையில், இலங்கைச் சிறையில் உள்ள மூன்று இந்திய மீனவர்களை விடுவிக்கக்கோரி தொடர்வேலை நிறுத்தப்போராட்டம்,உண்ணாவிரத போராட்டம் மற்றும் மூன்றுநாள் தொடர்நடை பயணம் என்பவற்றை முன்னெடுத்திருந்தனர்.

இந்நிலையில் ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியரின் தலையீட்டையடுத்து போராட்டங்களை கைவிட்ட நிலையில், ஏழு நாட்களுக்கு பின்னர் மீனவர்கள் தமது வழைமையான பணிகளில் ஈடுபடத்தொடங்கியுள்ளனர்.

மீனவர்களின் உண்ணாவிரத போராட்ட இடத்திற்கு நேற்று சென்றிருந்த இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் காதர் பாட்ஷா முத்துராமலிங்கம், இராமேஸ்வர மீனவர்கள் விரைவில் தமிழக முதல்வரை சந்திக்க ஏற்பாடுகள் செய்துதருவதாக வழங்கிய வாக்குறுதி வழங்கியிருந்தார்.

இந்த நிலையில் உண்ணாவிரத போராட்டம் மற்றும் தொடர் வேலை நிறுத்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதற்கு இராமேஸ்வரம் மீனவர்கள் உறுதியளித்திருந்தனர்.

இதனையடுத்து, இன்று இராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து ஆயிரத்திற்கும் மேற்பட்ட மீனவர்கள் வழமையான கடற்தொழில் நடவடிக்கையில் ஈடுப்பட்டனர்.

related posts