Home உலகம் நேபாளத்தில் 57 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி

நேபாளத்தில் 57 லட்சம் குழந்தைகளுக்கு ரூபெல்லா தடுப்பூசி

by Jey

நேபாளத்தில் நாடு முழுவதும் உள்ள 57 லட்சம் குழந்தைகளுக்கு தட்டம்மை மற்றும் ரூபெல்லா தடுப்பூசி போடுவது என அந்நாட்டு அரசு முடிவு செய்து உள்ளது.

இதற்காக வருகிற மார்ச் 20-ந்தேதி வரை தேசிய அளவில் தடுப்பூசி முகாம்கள் செயல்படும்.

இதில், இந்திய எல்லை மற்றும் காத்மண்டு பள்ளத்தாக்கிற்கு உட்பட்ட 3 மாவட்டங்கள் என அதிகம் தொற்று பாதித்த 21 பகுதிகள் உள்பட 24 மாவட்டங்களில் இந்த தடுப்பூசி முகாம்கள் அமைக்கப்படும்.

இதன்படி, 9 மாதம் முதல் 15 வயது வரையுடைய குழந்தைகளுக்கு தடுப்பூசி போட இலக்கு நிர்ணயிக்கப்பட்டு உள்ளது.

related posts