உலக வர்த்தக சங்கத்தின் ஏற்பாட்டில் நடைபெறும் வர்த்தக பேச்சுவார்த்தை மாநாட்டில் இந்திய வர்த்தக அமைச்சர் பியுஷ் கோயல் பங்கேற்காமை ஏமாற்றத்தை அளித்துள்ளதாக பங்கேற்பாளர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
நான்கு நாட்கள் கொண்ட அமர்வானது நேற்றைய தினம் டுபாயில் ஆரம்பமானது.
இந்திய அமைச்சர் கலந்துகொள்ளாமையினால் முக்கிய பேச்சுவார்த்தைகள் தடைப்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
மீன்பிடி மற்றும் இலத்திரனியல் வர்த்தகம் தொடர்பான பேச்சுவார்த்தையில் முக்கிய தரப்பாக இந்திய அமைச்சர் பியுஷ் கோயல் காணப்படும் நிலையில் அவர் கலந்து கொள்ளாமை ஏமாற்றம் அளிப்பதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
புதுடெல்லியில் இடைபெற்ற ஆடை உற்பத்தி தொடர்பான நிகழ்வொன்றில், பிரதமர் நரேந்திரமோடியுடன் அமைச்சர் கலந்து கொண்டமையினால் அவரால் மாநாட்டில் கலந்து கொள்ளமுடியாமல் போனதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் இந்திய அமைச்சர் பின்னைய அமர்வுகளில் கலந்து கொள்ளக்கூடும் எனவும் எதிர்பார்க்கப்படுகின்றது.