Home இந்தியா இராமேஸ்வரம் பகுதிகளுக்கு 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை

இராமேஸ்வரம் பகுதிகளுக்கு 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை

by Jey

இந்தியா தனுஷ்கோடி மற்றும் இராமேஸ்வரம் பகுதிகளுக்கு 40 நாட்களுக்கு பின் காலதாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை வந்துள்ளது.

கடல் மாசுபாடு மற்றும் கடல் நீர் தரம் குறைவதால் பறவைகளின் வருகை குறைந்து வருவதாக பறவைகள் ஆர்வலர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

இராமேஸ்வரம் அடுத்து தனுஷ்கோடி செல்லும் பாதையில் அமைந்துள்ள கோதண்டராமர் கோயில் கடற்கரைப்பகுதி அருகே அமைந்துள்ள கடல் நீர் மற்றும் மழைநீர் தேங்கும் பகுதிக்கு ஐரோப்ப கண்டத்தில் இருந்து பிளமிங்கே பறவைகள் வருடந்தோறும் டிசம்பர் மாதம் இறுதி முதல் ஜனவரி மாத இறுதிவரை உணவு தேடி வந்து செல்கின்றன.

அங்குள்ள சதுப்பு நிலப்பகுதியில் வாழும் கடல்வாழ் உயிரினங்களை உணவாகக் கொண்டு வாழ்ந்து வரும் பிப்ரவரி தொடக்கத்தில் தமிழகத்திலுள்ள சரணலாயங்களுக்கு செல்லும் ஆனால் இந்தாண்டு 40 நாட்கள் கால தாமதமாக பிளமிங்கோ பறவைகள் வருகை தந்துள்ளது.

பிறமிங்கோ பறவைகளை இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்து இராமேஸ்வரத்துக்கு வரும் சுற்றுலாபயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் பறவைகள் உணவு தேடும் அரிய காட்சிகளை கண்டு ரசித்து வருகின்றனர்.

இந்நிலையில் பருவநிலை மாற்றம் மற்றும் சமூகவிரோதிகள் வேட்டையாடி வந்ததால் கடந்த இரண்டு வருடங்களாக பிளமிங்கோ பறவைகள் வருவது தடைப்பட்டது. இதனால் சுற்றுலாப்பயணிகள் மற்றும் உள்ளுர் பொதுமக்கள் ஏமாற்றம் அடைந்து வந்த நிலையில் இந்தாண்டு வருகை வரும் பறவைகள் கடந்த சில நாட்களாக வந்த வண்ணம் உள்ளது.

related posts