Home கனடா பனிப்பொழிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் அவதானம் -கனடிய சுற்றாடல் திணைக்களம்

பனிப்பொழிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் மக்கள் அவதானம் -கனடிய சுற்றாடல் திணைக்களம்

by Jey

கிழக்கு ஒன்றாரியோ மற்றும் கியூபெக் மாகாணங்களில் கடுமையான பனிப்பொழிவு குறித்து எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்றைய தினம் மாலை வேளையில் கடுமையான குளிர் நிலையை உணர நேரிடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கனடிய சுற்றாடல் திணைக்களம் இது தொடர்பிலான எச்சரிக்கையை விடுத்துள்ளது.

ஒட்டாவாவில் இன்றிரவு மறை 13 பாகை செல்சியஸ் அளவில் வெப்பநிலை நீடிக்கும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

பனிப்பொழிவு ஏற்படக்கூடிய பகுதிகளில் நடப்பது மற்றும் வாகனங்களை செலுத்துவது போன்ற விடயங்களில் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டுமென அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இதேவேளை, ஒன்றாரியோவின் சில பகுதிகளில் வழமைக்கு மாறான வெப்பநிலை நீடித்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

 

 

 

 

related posts