உலக அளவில் அதிக வாக்காளர்களைக் கொண்ட இந்தியாவின் 18வது நாடாளுமன்ற மக்களவைக்கான தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படவுள்ளது.
இதில், மத்தியில் ஆளும் பாஜக தலைமையில் தேசிய ஜனநாயகக் கூட்டணி, காங்கிரஸ், கம்யூனிஸ்ட் உள்ளிட்ட கட்சிகளைக் கொண்ட இண்டியா கூட்டணி என இருமுனைப் போட்டி பெரும்பான்மை மாநிலங்களில் உள்ளது.
ஆந்திரா, தெலங்கானா, ஒடிசா உள்ளிட்ட சில மாநிலங்களில் மும்முனைப் போட்டி உருவாகும் நிலை உள்ளது.
தமிழ்நாட்டில் தி.மு.க, அ.தி.மு.க, பா.ஜ.க தலைமையில் கூட்டணிகளும் நாம் தமிழர் கட்சி தனித்தும் என 4 முனைப்போட்டி உருவாகியுள்ளது.
கூட்டணிப் பேச்சுகள், தொகுதிப் பங்கீடு இழுபறிகளுக்கு இடையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பு பணிகளில் கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன.
தேர்தல் பிரச்சாரக் களத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தும் பேசு பொருளாகும் கட்சிகளின் தேர்தல் அறிக்கையின் முன்னோட்டமாக முழக்கங்களை வெளியிட்டுள்ளனர். அந்த முழக்கங்கள் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளன.