மேற்குவங்கத்தில் கங்கை நதியின் நீர் மிகவும் மாசுபட்டுள்ளதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் தெரிவித்துள்ளது.
கங்கை நீரின் தரத்தை மேம்படுத்தவில்லை என்றால், அபராதம் விதிக்கப்படும் என மேற்கு வங்க அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
மேற்கு வங்காளத்தின் சம்பந்தப்பட்ட அதிகாரிகளை எச்சரித்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கையில் கலக்கும் கழிவுநீர் பிரச்சினையில் எதிர்பார்த்த முன்னேற்றம் காணப்படாவிட்டால், காரணமான அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளது.
மாநிலத்திலிருந்து எடுக்கப்பட்ட கங்கை நீர் மாதிரிகளை ஆய்வு செய்த தேசிய பசுமை தீர்ப்பாயம், கங்கையில் உள்ள ஃபெகல் கோலிஃபார்ம் பாக்டீரியாவின் அளவு அதிகரித்துள்ளதை கண்டறிந்துள்ளது.
தினமும் 258.67 மில்லியன் லிட்டர் சுத்திகரிக்கப்படாத கழிவுநீர் ஆற்றில் நேரடியாக கலப்பதாக தேசிய பசுமை தீர்ப்பாயம் கண்டறிந்தது. இதனால், அப்பகுதி மக்களின் உடல் நலமும் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளது.