Home கனடா கனடாவிற்குள் நுழைந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பாத பிஐஏ பெண் ஊழியர்கள்

கனடாவிற்குள் நுழைந்து மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்பாத பிஐஏ பெண் ஊழியர்கள்

by Jey

பாகிஸ்தான் அரசுக்கு சொந்தமான பிஐஏ எனப்படும் ‘பாகிஸ்தான் சர்வதேச விமான சேவை” நிறுவனம். பிஐஏ-விற்கு சொந்தமான ஒரு விமானத்தில் பயணியர் சேவைக் குழுவில் பணி புரிந்து வந்தவர் “மர்யம் ராசா”

பாகிஸ்தானில் இருந்து கனடா நாட்டின் டொரன்டோ விமான நிலையத்தில் தரையிறங்கியது. அந்த விமானத்தில் பணியாற்றிய மர்யம் ராசா, விமானம் தரையிறங்கியதும் டொரன்டோ நகருக்குள் சென்றார்.

மறுநாள் விமானம் புறப்பட வேண்டிய நேரத்தில் பணிக்கு திரும்ப வேண்டிய மர்யம், பணிக்கு வரவில்லை.

இதையடுத்து அவர் தங்கியிருந்த ஓட்டலுக்கு சென்று அதிகாரிகள் அவரை தேடினர். முறையான காவல்துறை அனுமதி பெற்று மர்யம் தங்கியிருந்த அறையை திறந்து பார்த்து போது அங்கு, மர்யம் ராசாவின் விமான பணிப்பெண் சீருடையையும், “நன்றி பிஐஏ”

எனும் குறிப்பையும் அவர் விட்டுச் சென்றது தெரிய வந்தது.

சுமார் 15 வருடங்கள் பிஐஏ-வில் பணியாற்றியவர் மர்யம் என்பது குறிப்பிடத்தக்கது.

மீண்டும் பாகிஸ்தானுக்கு திரும்ப விருப்பமில்லாத மர்யம் போன்ற பல பிஐஏ பெண் ஊழியர்கள் அடுத்தடுத்து கனடாவிற்குள் நுழைந்து தங்களை குறித்த தகவல்களை எவருக்கும் தெரிவிக்காமல் காணாமல் போகின்றனர்.

related posts