ரிலையன்ஸ் குழும தலைவர் முகேஷ் அம்பானி மற்றும் நீதா அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் திருமணம் ஜூலை 12-ம் தேதி நடைபெற உள்ளது.
இந்நிலையில், இவர்களின் திருமணத்திற்கான ஏற்பாடுகள் பிரம்மாண்டமாக நடைபெற்று வருகின்றன.
ஜாம்நகரில் நடைபெறும் நிகழ்ச்சியில் உலக கோடீஸ்வரர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
முன்னதாக, ஆனந்த் அம்பானி மற்றும் ராதிகா மெர்ச்சன்ட் கடந்த ஆண்டு ஜனவரி 19-ம் தேதி ஆடம்பரமான நிச்சயதார்த்தம் செய்து கொண்டனர்.
இதையடுத்து, நேற்று ‘ அன்ன சேவை ‘ என்ற பெயரில் திருமண விருந்து நடைபெற்றது. இதில் 51,000 கிராமவாசிகள் கலந்து கொண்டனர்.
ஒரே நேரத்தில் 2,500 உணவுகள் பரிமாறப்பட்டன. இதற்காக பிரத்யேக மெனு தயார் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.