கனடாவில் கனரக வாகனப் போக்குவரத்துச் சேவை மேம்படுத்தப்படும் என ஒன்றாரியோ மாகாண போக்குவரத்து இணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் உறுதியளித்துள்ளார்.
கனடாவில் நீண்ட காலமாக இயங்கிவரும் ‘ஒன்றாரியோ கனரக வாகன சாரதிப் பயிற்சி நிறுவனங்கள் சங்கத்தின்’ வருடாந்த மாநாடு நேற்றைய தினம் மிசிசாகா நகரில் உள்ள மண்டபம் ஒன்றில் நடைபெற்றது.
மேற்படி மாநாட்டில் சிறப்புப் பேச்சாளராகக் கலந்து கொண்ட மாகாணத்தின் போக்குவரத்து அமைச்சின் துணை அமைச்சர் விஜேய் தணிகாசலம் இந்த உறுதிமொழியை வழங்கியுள்ளார்.