இந்தியாவால் தேடப்பட்டு வந்த மேலும் பிரபலமான தீவிரவாத தலைவர் ஒருவர் பாகிஸ்தானில் இறந்த நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இந்தியாவின் காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியைச் சேர்ந்த ஷேக் ஜமீல் உர் ரஹ்மான் என்ற இந்த நபர் ஐக்கிய ஜிஹாத் பேரவையின் பொதுச் செயலாளராக பதவி வகித்து வந்தார்.
கடந்த 2022 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் இந்தியா, அவரை தீவிரவாதியாக அறிவித்தது.
இந்த நிலையில்,பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் உள்ள அபோதாபாத்தில் கடந்த சனிக்கிழமை மர்மமான முறையில் இறந்து கிடந்துள்ளார்.
இறந்த ஷேக் ஜமீல் உர் ரஹ்மான், தெஹ்ரீக்-உல்-முஜாஹிதீன் என்ற அமைப்பின் தலைவரும் ஆவார். அவரது மரணத்திற்கான காரணம் தெளிவாக தெரியவில்லை என பாகிஸ்தான் அதிகாரிகள் தெரிவித்தனர்.
பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐயுடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த ஷேக் ஜமீல், ஜம்மு காஷ்மீரில் பல்வேறு குண்டுவெடிப்பு சம்பவங்களில் ஈடுபட்டவர் என குற்றம் சுமத்தப்படுகிறது.