Home இந்தியா இந்தியாவில் சமத்துவமின்மையில் சரிவு

இந்தியாவில் சமத்துவமின்மையில் சரிவு

by Jey

இந்தியா தீவிர வறுமையை ஒழித்து விட்டதாக அமெரிக்காவின் பொருளாதார வல்லுநர்கள் இருவர் இணைந்து வெளியிட்டுள்ள தகவலில் தெரியவந்துள்ளது.

2022ஆம் ஆண்டு தொடக்கம் 2023ஆம் ஆண்டிற்கான நுகர்வு செலவினத் தகவலை சுர்ஜித் பல்லா மற்றும் கரண் பாசின் எனும் இரு பொருளாதார வல்லுநர்கள் இணைந்து இந்த தகவலை வெளியிட்டுள்ளனர்.

அதன்படி, இந்தியாவின் தனிநபர் நுகர்வானது 2011ஆம் ஆண்டு தொடக்கம் ஆண்டுக்கு 2.9 வீதம் வளர்ச்சியடைந்துள்ளது.

இதேவேளை, இந்தியாவில் கிராமப்புற மற்றும் நகர்ப்புற சமத்துவமின்மையில் சரிவு ஏற்பட்டுள்ளது.

அதிக வளர்ச்சி மற்றும் சமத்துவமின்மையே இந்தியாவில் வறுமையை ஒழிப்பதில் பிரதான பங்காற்றியுள்ளது என்று வல்லுநர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

மேலும், சர்வதேச ஒப்பீடுகளில் பொதுவாக வரையறுக்கப்பட்டுள்ளபடி, இந்தியா தீவிர வறுமையை ஒழித்துள்ளது என்பதை அதிகாரப்பூர்வ தரவுகள் உறுதிப்படுத்துகின்றன என்றும் பொருளாதார வல்லுநர்கள் தெரிவித்துள்ளனர்.

related posts