நேபாள காங்கிரஸுடனான கூட்டணியை நேபாள பிரதமர் புஷ்ப கமல் தஹல் பிரசண்டா முறித்துக் கொண்டதை அடுத்து நேபாள அரசியலில் நெருக்கடியான நிலைமை ஏற்பட்டுள்ளது.
நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மவோஸ்ட் மையம்),காங்கிரஸ் கட்சிகளுக்கும் இடையில் ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக, நேபாள அந்த கட்சியுடான கூட்டணியை பிரதமர் பிரசண்டா முடித்துக் கொண்டுள்ளார்.
இதனையடுத்து முன்னாள் பிரதமர் காட்கா பிரசாத் சர்மா ஒலியின் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) புதிய கூட்டணி அமைக்க பிரசண்டா முடிவு செய்தார்.
பிரசண்டா தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சி (மாவோயிஸ்ட் மையம்) மற்றும் ஷேர் பகதூர் தேவுபா தலைமையிலான நேபாளி காங்கிரஸ் இடையேயான கூட்டணி முடிவுக்கு வந்துள்ளதாகவும், இரு முக்கிய தலைவர்களுக்கு இடையேயான கருத்து வேறுபாடுகள் தீவிரமடைந்துள்ளதாகவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் மையம்) தலைவர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
நேபாள காங்கிரஸ் பிரதமருக்கு ஒத்துழைக்கவில்லை எனவும் இதனால்தான் புதிய கூட்டணியைத் தேட வேண்டியதாயிற்று எனவும் நேபாள கம்யூனிஸ்ட் கட்சியின் (மாவோயிஸ்ட் மையம்) செயலாளர் கணேஷ் ஷா கூறியுள்ளார்.
பிரசண்டா, நேபாள காங்கிரஸின் ஆதரவுடன் கடந்த 2022 ஆம் ஆண்டு டிசம்பர் 25 ஆம் திகதி நேபாளத்தின் பிரதமராக பதவியேற்றார்.
பிரதிநிதிகள் சபையில் மிகப்பெரிய கட்சியான நேபாளி காங்கிரஸுடனான கூட்டணியை முறித்துக் கொண்ட பிரசண்டா, ஒலி தலைமையிலான நேபாள கம்யூனிஸ்ட் கட்சியுடன் (ஒருங்கிணைந்த மார்க்சிஸ்ட்-லெனினிஸ்ட்) கைகோர்க்க முடிவு செய்துள்ளார்.