Home கனடா அமெரிக்க விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் பலி

அமெரிக்க விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் பலி

by Jey

அமெரிக்காவின் நாஸ்வில் பகுதியில் இடம்பெற்ற விமான விபத்தில் ஐந்து கனடியப் பிரஜைகள் கொல்லப்பட்டுள்ளனர்.

ஒன்றாரியோவிலிருந்து பயணம் செய்த விமானமே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.

விமானத்தின் விமானி, சக பயணி மற்றும் மூன்று சிறுவர்கள் இந்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தவர்களின் ஆள் அடையாள விபரங்கள் எதுவும் இதுவரையில் வெளியிடப்படவில்லை.

இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட உள்ளதாக கனடிய வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

விமான விபத்திற்கான காரணங்கள் எதுவும் இதுவரையில் கண்டறியப்படவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.

related posts