Home உலகம் நேபாளத்தில் பஸ் விபத்து

நேபாளத்தில் பஸ் விபத்து

by Jey

நேபாளத்தில், தலைநகர் காத்மண்டுவை நோக்கி 48 பேருடன் இன்று(06) காலை பயணித்த பஸ் ஒன்று, தடிங் மாவட்டத்துக்குட்பட்ட பகுதியில் நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்த போது திடீரென்று ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்தது.இதில், பஸ்ஸானது திரிசூலி ஆற்றுக்குள் கவிழ்ந்து விபத்திற்குள்ளானது.

ஆற்றில் பஸ் கவிழ்ந்ததில் பயணிகள் பலர் நீருக்குள் மூழ்கியதில், 5 பேர் உடல்களை மீட்பு குழுவினர் மீட்டனர். காயமடைந்த 2 பேர் சிகிச்சைக்கு கொண்டு சென்றபோது உயிரிழந்தனர். இதனால், விபத்தில் மொத்தம் 7 பேர் வரை உயிரிழந்துள்ளனர். 30 பேர் காயமடைந்தனர்.

இதுகுறித்து, மாவட்ட பொலிஸ் உயரதிகாரி கூறும்போது, சரியான சாலை வசதி இல்லாததே விபத்துக்கு காரணம் என பஸ் ஓட்டுநர் கூறியுள்ளார். இந்த விபத்துக்கான காரணம் குறித்து நாங்கள் விசாரித்து வருகிறோம் என கூறினார்.

 

related posts