Home கனடா கனடாவில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் சைபர் குற்றச் செயல்கள்

கனடாவில் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் சைபர் குற்றச் செயல்கள்

by Jey

கனடாவின் முக்கிய நிறுவனங்களை இலக்கு வைத்து சைபர் தாக்குதல்கள் அதிகளவில் இடம்பெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்றது.

நாட்டின் நிதி புலனாய்வு பிரிவு இது தொடர்பிலான தகவல்களை வெளியிட்டுள்ளது.

கனடிய பொலிஸ் திணைக்களம் மற்றும் வெளிவிவகார அமைச்சு உள்ளிட்ட நிறுவனங்கள் மீதும் சைபர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.

சைபர் குற்றச் செயல்கள் தொடர்ச்சியாக அதிகரித்துச் செல்லும் நிலையை அவதானிக்க முடிவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

கடந்த காலங்களை விடவும் தற்பொழுது மிக எளிதில் கனடாவின் பல நிறுவனங்கள் மற்றும் அமைப்புக்கள் சைபர் தாக்குதல்கள் நடத்தப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

related posts