கனடிய கலைஞர் ஒருவர் இரண்டாவது தடவையாகவும் ஒஸ்கார் விருது வென்றுள்ளார்.
ஹாலிபெக்ஸை பிறப்பிடமாகக் கொண்ட பென் பிரவுட்புட் சிறந்த குறு விவரணத்திற்கான ஒஸ்கார் விருதினை வென்றுள்ளார்.
33 வயதான பென் மற்றும் அவரது இணை இயக்குனர் கிறிஸ் போவர்ஸ் ஆகியோர் தி லாஸ்ட் ரிபாயார் ஷொப் (The Last Repair Shop) என்ற குறு விவரணத்திற்காக விருது வென்றுள்ளனர்.
பாடசாலை மாணவர்களது கருவிகளை இலவசமாக பழுதுபார்க்கும் ஒர் பழுதுபார்க்கும் நிலையத்தை அடிப்படையாகக் கொண்டு இந்த விவரணம் தயாரிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே கடந்த 2002ம் ஆண்டில் பென் ஒஸ்கார் விருது வென்றிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
தி குயின்ஸ் பாஸ்கட்போல் ( The Queen of Basketball) என்ற விவரணத்திற்காக இவ்வாறு விருது வென்றிருந்தார்.
இரண்டாவது தடவையாகவும் ஒஸ்கார் விருது வென்றெடுக்க சந்தர்ப்பம் கிடைக்கும் என கனவிலும் நினைத்துப் பார்க்கவில்லை என பென் தெரிவித்துள்ளார்.