Home இந்தியா விவசாயிகளுக்கான 5 வாக்குறுதிகளை வெளியிட்ட – காங்கிரஸ்

விவசாயிகளுக்கான 5 வாக்குறுதிகளை வெளியிட்ட – காங்கிரஸ்

by Jey

மக்களவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி வென்றால், விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை கிடைக்க சட்டம் இயற்றப்படும் என்பது உள்ளிட்ட விவசாயிகளுக்கான 5 முக்கிய வாக்குறுதிகளை வெளியிட்டுள்ளது காங்கிரஸ் கட்சி.

நாடாளுமன்ற தேர்தல் அறிவிப்பு எப்போது வேண்டுமானாலும் வரலாம் என அறிவிக்கப்பட்டுகிறது. இந்நிலையில் அனைத்து கட்சிகளும் மக்களை எதிர்கொள்ள தயாராகி வருகின்றன. குறிப்பாக கூட்டணி பேச்சுவார்த்தையை முடித்து தொகுதி பங்கீடு செய்வது உள்ளிட்ட பணிகளை தீவிரமாக செய்து வருகின்றன.

இந்த வரிசையில் காங்கிரஸ் கட்சி 2 கட்ட வேட்பாளர் பட்டியலை வெளியிட்டிருப்பதோடு, வரவுள்ள மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றால் என்னவெல்லாம் செய்வோம் என்பது குறித்த வாக்குறுதிகளையும் அவ்வப்போது காங்கிரஸ் கட்சி அறிவித்து வருகிறது.

இதன்படி, ஏற்கனவே பெண்களை மையப்படுத்தி ஏழைப் பெண்களுக்கு ஆண்டுதோறும் ரூ.1 லட்சம் வழங்கப்படும் என்றும், பெண்களுக்கு அரசு வேலைகளில் 50 சதவீத இடஒதுக்கீடு வழங்கப்படும் உள்ளிட்ட 5 வாக்குறுதிகள் காங்கிரஸ் கட்சி சார்பில் அளிக்கப்பட்டது. இதே போன்று இளைஞர்களை மையப்படுத்தி 5 வாக்குறுதிகளும் வெளியிடப்ப்பட்டன.

இதன் தொடர்ச்சியாக இன்று (14.03.2024) விவசாயிகளுக்கான 5 வாக்குறுதிகளை காங்கிரஸ் கட்சி வெளியிட்டுள்ளது.

related posts