கனடாவில் ஒட்டாவாவில் ஆறு இலங்கையர்களை படுகொலை செய்ததாக குற்றம் சுமத்தப்பட்டுள்ள இலங்கை இளைஞனின் விளக்க மறியல் காலம் நீடிக்கப்பட்டுள்ளது.
19 வயதான பேர்பியோ டி சொய்சா என்ற இளைஞர் பாதுகாப்பு தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவரது சட்டத்தரணி எவான் லைடெல் தெரிவித்துள்ளார்.
கத்தி போன்ற கூரிய ஆயுதமொன்றை பயன்படுத்தி நான்கு சிறுவர்கள் ஒரு பெண் ஒரு ஆண் உள்ளிட்ட ஆறு பேரை சொய்சா படுகொலை செய்தார் என குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
சொய்சா நேற்றைய தினம் காணொளி தொழில்நுட்பம் ஊடாக நீதிமன்றில் முன்னிலையாகியுள்ளார்.
இந்த கொலை வழக்கு எதிர்வரும் 28ம் திகதிக்கு ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.