Home இந்தியா இரட்டை இலையை பயன்படுத்த ஓ.பி.எஸ்ஸுக்கு நிரந்தரத் தடை

இரட்டை இலையை பயன்படுத்த ஓ.பி.எஸ்ஸுக்கு நிரந்தரத் தடை

by Jey

அ.தி.மு.கவின் கொடி, சின்னம் உள்ளிட்டவற்றை பயன்படுத்த ஓ.பி.எஸ்ஸுக்கு விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நிரந்தரமாக்கி இன்று (18) சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனு மீதான விசாரணையின்போதே உயர் நீதிமன்றம் மேற்படி அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.

அதில், அ.தி.மு.கவின் பெயர், கட்சிக் கொடி, இரட்டை இலை சின்னம் மற்றும் லெட்டர் பேட் ஆகியவற்றை தமிழக முன்னாள் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் அவரது அணியினர் பயன்படுத்த நிரந்தர தடை விதித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

related posts