இணையத்தில் தகவல்களை பகிர்வது தொடர்பில் பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் பண்டிகைக் காலத்தில் பிரபல நிறுவனங்களின் பெயர்களை பயன்படுத்தி நபர்களின் தனிப்பட்ட தரவுகள் திரட்டப்படுவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சமூக ஊடகங்களின் வாயிலாக இவ்வாறு தகவல் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.
இலங்கை கணனி அவசர பதிலளிப்பு பிரிவினால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பரிசுப் பொருட்கள் வழங்குவதாக கூறி அலைபேசிகளுக்கு குறுஞ்செய்திகளை அனுப்பி வைப்பதன் மூலம் தகவல்கள் திரட்டப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது
இந்த ஆண்டின் ஜனவரி மற்றும் பெப்ரவரி மாதங்களில் இவ்வாறான சம்பவங்கள் தொடாபில் சுமார் 200க்கும் மேற்பட்ட முறைப்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.