கனடாவில் வீட்டில் வளர்க்கப்பட்ட இராட்சத பாம்பு ஒன்றை அதிகாரிகள் மீட்டுள்ளனர்.
பிரிட்டிஸ் கொலம்பிய மாகாணத்தின் வனவிலங்கு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் குறித்த பாம்பினை மீட்டுள்ளனர்.
ஒன்பது அடி நீளமான இராட்சத மலைப்பாம்பு ஒன்று இவ்வாறு மீட்கப்பட்டுள்ளது.
கனடாவில் தனிச்சிறப்புடைய விலங்கினங்கள் வீட்டில் செல்லப் பிராணிகளாக வளர்ப்பது தடை செய்யப்பட்டுள்ளது.
குறித்த பாம்பினை வீட்டில் வளர்த்த நபருக்கு எதிராக நீதிமன்றில் வழக்குத் தொடரப்பட உள்ளது.
சட்டவிரோதமான முறையில் இவ்வாறு விலங்குகளை வீட்டில் வளர்ப்பது ஒரு லட்சம் டொலர் அபராதம் அல்லது ஓராண்டுகால சிறைத்தண்டனை விதிக்கப்படக் கூடிய குற்றமாகும் என தெரிவிக்கப்படுகின்றது.