ஒன்றாரியோ மாகாணத்தில் குரங்கம்மை நோய்த் தொற்று பரவுகை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குரங்கம்மை தொற்று குறித்து பரிசோதனைகளை நடத்துமாறு பொதுச் சுகாதார அதிகாரிகள் அறிவுறுத்தல்கள் வழங்கியுள்ளனர்.
கடந்த ஜனவரி முதல் மாகாணத்தில் 26 நோய்த் தொற்றாளர்கள் பதிவாகியுள்ளனர்.
கடந்த 2023ம் ஆண்டில் மொத்தமாகவே 33 குரங்கம்மை நோயாளர்களே மாகாணத்தில் பதிவாகியிருந்தனர்.
ஒப்பீட்டளவில் இந்த ஆண்டில் நோய்த் தொற்றுக்கு உள்ளானவர்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.
குரங்கம்மை தொற்றாளர்கள் அதிகளவு பதிவான பகுதியாக ரொறன்ரோ காணப்படுகின்றது.
அடையாளம் காணப்பட்ட நோயாளர்களில் 77 வீதமான நோயாளர்கள் ரொறன்ரோவைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
நோய் அறிகுறிகள் குறித்து மக்கள் எச்சரிக்கையுடன் செயற்பட வேண்டுமென அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.