ஐபிஎல் தொடரின் 13வது போட்டி ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டி மைதானத்தில் நடைபெற்றது.
ருதுராஜ் கெய்க்வாட் தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் ரிஷப் பண்ட் தலைமையிலான டெல்லி கேபிடல்ஸ் அணிகளுக்கிடையே நடைபெற்றது. இந்த போட்டியில் டெல்லி கேபிடல்ஸ் அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட் இழப்புக்கு 191 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
இந்த தொடரின் முதல் வெற்றியை டெல்லி அணியும், முதல் தோல்வியை சென்னை அணியும் பதிவு செய்தன. இருப்பினும், இந்த ஆட்டத்தில் இரு சிறப்பு வாய்ந்த சம்பவம் அரங்கேறின. விபத்தில் இருந்து உடல் நலம் பெற்று வந்து மீண்டும் விளையாட தொடங்கியுள்ள டெல்லி அணியின் கேப்டன் ரிஷப் பந்த் அரைசதம் அடித்து அணியை வெற்றி நோக்கி அழைத்துச் சென்றார்.
இதையடுத்து மற்றொரு சிறப்பு வாய்ந்த சம்பவம் மகேந்திர சிங் தோனி, தான் தொடக்க காலத்தில் வைத்திருந்த ஹேர் ஸ்டைலுடனும், அதே வேகத்துடனும் களத்தில் அதிரடியாக ஆடி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளார்.