துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் இரவுநேர களியாட்ட விடுதியொன்றில் பரவிய தீயில் சிக்கி புனரமைப்பு பணிகளில் ஈடுபட்டு வந்த தொழிலாளர்கள் உள்பட 29 பேர் உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.
புனர்நிர்மாணப் பணிகள் இடம்பெற்றுக் கொண்டிருந்த போதே இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மதுபான விடுதி அமைந்திருந்த அடுக்குமாடி குடியிருப்பின் தரைத்தளம் முழுவதும் தீக்கிரையானது.
இந்த சம்பவம் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ள நிலையில், தீ பரவியமைக்கான காரணம் தௌிவாகத் தெரியவில்லை என இஸ்தான்புல் ஆளுநர் தெரிவித்துள்ளார்.