தைவான் நாட்டில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்ட நிலையில் அங்குள்ள இந்தியர்கள் உள்ளூர் நிர்வாகத்தின் அறிவுறுத்தல்களை கவனித்து பாதுகாப்பாக இருக்க வலியுறுத்தப்பட்டுள்ளது.
தைவான் நாட்டின் தலைநகரான தைபேவில் இன்று அதிகாலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. தைபேவின் கிழக்கு பகுதியான ஹுவாலியனில் பல கட்டிடங்கள் இந்த நிலநடுக்கத்தால் குலுங்கின.
ரிக்டர் அளவுகோலில் 7.4 ஆக பதிவானதாகவும், சுமார் 35 கி.மீ. ஆழத்தில் பதிவானதாகவும் அந்நாட்டின் வானிலை ஆய்வு மைய அமைப்பு தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தை தொடர்ந்து தைபேவின் பல்வேறு பகுதிகளில் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது. ஹுவாலியனில் பல கட்டிடங்கள் சரிந்து விழுந்துள்ளன. இதனால் அப்பகுதி பொதுமக்கள் வீதிகளில் தஞ்சமடைந்துள்ளனர். 1 மணி நேரத்திற்குள்ளாக 11 முறை நில-அதிர்வு உணரப்பட்டுள்ளது.