Home Uncategorized திடீரென முடங்கிய – வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்

திடீரென முடங்கிய – வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள்

by Jey

உலகளவில் கோடிக்கணக்கான மக்களால் வாட்ஸ்-அப், இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகள் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த நிலையில் நேற்று இரவு 11.45 மணியளவில் உலகம் முழுவதும் வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் செயலிகள் திடீரென முடங்கின.

இதனால் இரண்டு தளங்களிலும் லட்சக்கணக்கான பயனர்கள் சிக்கல்களை சந்தித்துள்ளனர்.

இந்த நிலையில் வாட்ஸ் அப் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 12,000 பேர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

இந்தியாவில் 20,000-க்கும் மேற்பட்ட பயனர்களும், பிரித்தானியாவில் சுமார் 46,000 பயனர்களும், பிரேசிலில் 42,000-க்கும் மேற்பட்ட பயனர்களும் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

மேலும், இன்ஸ்டாகிராம் முடங்கியதாக அமெரிக்காவில் சுமார் 4,800 பேர் முறைப்பாட்டை பதிவு செய்துள்ளனர்.

மெட்டாவுக்குச் சொந்தமான செயலிகள் முடங்குவது இந்த ஆண்டில் இது இரண்டாவது முறையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

related posts