மக்களவைத் தேர்தல் தொடங்குவதற்கு இன்னும் 10 நாட்களே இருக்கும் நிலையில், முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரேஷி வெளியிட்டுள்ள பதிவு பேசு பொருளாகியுள்ளது. அவர் பாஜகவை விமர்சனம் செய்வதாக கருத்துகள் பரவி வருகின்றன.
நாடு முழுவதும் மக்களவை தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 19-ம் தேதி மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. ஜூன் 4-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.
வேட்புமனுத் தாக்கல் நிறைவு பெற்ற நிலையில், தேர்தல் பரப்புரையில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரம் காட்டி வருகின்றன.
பொதுக்கூட்டங்கள், பரப்புரைகள் தவிர அரசியல் தலைவர்களின் சமூக வலைதள பக்கங்களும் சில நாட்களாகவே பெரும் கவனிப்பை பெற்று வருகின்றன.
இதற்கிடையே இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் எஸ்.ஒய்.குரைஷி தனது ட்விட்டர் (எக்ஸ்) பக்கத்தில் இந்திய தேர்தல் குறித்து பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். இந்த பதிவு இணையத்தில் டிரெண்ட் ஆகியுள்ளது