அமெரிக்காவைத் தொடர்ந்து கனடாவிலும் இந்திய மாணவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு சென்று கல்வி கற்கும் மாணவர்களின் எண்ணிக்கை கனிசமான அளவு உயர்ந்துள்ளது.
அதிலும் குறிப்பாக அமெரிக்கா, கனடா மற்றும் இங்கிலாந்து போன்ற நாடுகளுக்கு கல்வி பயில அதிகளவு மாணவர்கள் செல்கின்றனர்.
இந்த நிலையில் சமீப காலமாக வெளிநாடுகளில் படிக்கும் இந்திய மாணவர்கள் தாக்குதலுக்குள்ளாவது, கொலை செய்யப்படுவது போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது.
அமெரிக்காவில் மட்டும் கடந்த சில மாதங்களாக இந்திய மாணவர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
நடப்பு ஆண்டில் தொடக்கத்தில் இருந்து இதுவரை 11 இந்திய மாணவர்கள் மற்றும் இந்திய வம்சாவளி மாணவர்கள் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளன.
மத்திய அரசின் புள்ளி விவரங்களின்படி கடந்த 2018லிருந்து இதுவரை 403 இந்திய மாணவர்கள் வெளிநாடுகளில் கொல்லப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் 36 மாணவர்கள் அமெரிக்காவில் மட்டும் கொல்லப்பட்டுள்ளதாக மத்திய அரசு மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது.