இத்தாலியில் வாடகைத்தாய் மூலம் குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு கடும் தண்டனையை அதிக்கப்படுத்தும் புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.
இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியோ மெலோனி, வாடகைத் தாய்மை முறை மனிதாபிமானமற்றது என தெரிவித்துள்ளார்.
தலைநகர் ரோமில் இளைஞர்களுக்கான மாநாட்டில் கலந்துகொண்டபோதே அவர் இதனை கூறினார். இதன்போது அவர் மேலும் கூறுகையில், “வாடகைத் தாய் ஒரு மனிதாபிமானமற்ற நடைமுறை என நான் நம்புகிறேன்.
இது சர்வதேச குற்றமாக ஏற்றுக்கொள்ளப்படும் வரை நான் இதற்கு எதிராக தொடர்ந்து போராடுவேன்” என்றார்.
அதேவேளை ஏற்கனவே இத்தாலியில் பணம் செலுத்தியும் அல்லது இல்லாமலும் வாடகைத்தாய் முறை சட்டவிரோதம் என அறிவிக்கப்பட்டிருந்தது.
இந்தநிலையில் வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு தண்டனை விவரம் அதிகரிக்கப்பட்டுள்ளது.
அதன்படி தற்போது வாடகைத்தாய் மூலமாக குழந்தை பெற்று கொள்பவர்களுக்கு 2 ஆண்டுகள் வரை சிறை தண்டனையும், ரூ.8 லட்சத்து 36 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படுவதற்கான புதிய சட்டமசோதா அமலுக்கு வந்துள்ளது.