Home உலகம் ஜான்சனின் இருமல் மருந்துக்கு தடை

ஜான்சனின் இருமல் மருந்துக்கு தடை

by Jey

அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் கலந்தமையினால் ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்துக்கு ஆறு நாடுகள் தடைவித்துள்ளன.

தென்னாப்பிரிக்கா, கென்யா, நைஜீரியா, ருவாண்டா, தான்சானியா உள்ளிட்ட நாடுகளில் பிரபல மருந்து தயாரிப்பு நிறுவனமான ஜான்சன் அண்ட் ஜான்சனின் இருமல் மருந்து விற்கப்பட்டு வந்தது.

குறிப்பாக 10 வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இந்த மருந்தை மருத்துவர்கள் பரிந்துரைந்து வந்தனர். இந்தநிலையில் இந்த மருந்தை குடித்த குழந்தைகள் பலருக்கு உடல்நலக்கோளாறு ஏற்பட்டது.

இதனையடுத்து அந்த மருந்தை அந்தந்த நாடுகளின் சுகாதாரத்துறை அமைச்சகங்கள் சோதித்தன. அதில் இருமல் மருந்தில் நிர்ணயிக்கப்பட்ட அளவைவிட அதிக அளவிலான வேதிப்பொருட்கள் இருந்துள்ளது.

இதனால் அதை குடிக்கும் குழந்தைகளின் உடலில் நச்சுத்தன்மை உண்டாகி உடல்நலக்கோளாறு ஏற்பட்டது தெரியவந்தது.

இதனையடுத்து தென் ஆப்பிரிக்கா, கென்யா, தான்சானியா உள்ளிட்ட 6 ஆப்பிரிக்க நாடுகளில் இந்த மருந்துக்கு தடை விதிக்கப்பட்டுள்லது. அதோடு சம்பந்தப்பட்ட நிறுவனம் விற்ற அனைத்து மருந்து பாட்டில்களையும் திரும்ப பெற உத்தரவிடப்பட்டுள்ளன.

 

 

 

related posts