கனடாவின் வான்கூவார் சானிச் பகுதியில் மலைச்சிங்கமொன்று சுற்றித் திரிவதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சானிச் பொலிஸார் இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளனர். வீடொன்றின் கொள்ளைப்புறத்தில் மலைச் சிங்கத்தை கண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
பொலிஸார் குறித்த பகுதிக்கு சென்ற போதிலும் மலைச் சிங்கத்தை கண்டு பிடிக்க முடியவில்லை என தெரிவித்துள்ளனர்.
இந்த சிங்கம் அடுத்து எங்கு சென்றது என்பது பற்றிய தெரியவில்லை எனவும் இதனால் மக்கள் அவதானத்துடன் இருக்க வேண்டுமெனவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மலைச் சிங்கம் பூனை இனத்தைச் சேர்ந்த பெரிய பூனை என்பதுடன் ஆபத்தானது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த மலைச் சிங்கத்தை எவரேனும் பார்த்தால் உடனடியாக அறிவிக்குமாறு பொதுமக்களிற்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.
மலைச் சிங்கத்தை நேரடியாக பார்த்தால் அதன் கண்களை நேரடியாக பார்க்குமாறும், ஆக்ரோசமாக சத்தம் எழுப்புமாறும், பற்களை காண்பிக்குமாறும் அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.